நீங்கள் போரெக்ஸ் ட்ரேடிங்கு சரிப் பட்டு வருவீர்களா?

பேராசை – பயம் 

பங்கு வணிகத்தில் பலரது நஷ்டத்திற்கும், வீழ்ச்சிக்கும் பேராசையும் பயமும் தான் அதி முக்கியமான கரணங்கள் ஆகும். பேராசையும் பயமும் இரு கண்கள் மற்றும்  நாணயத்தின் இரு பகுதிகள் போல.


உதாரணமாக 1 லட்சம் ரூபாய் கொண்டு வணிகம் செய்யும் ஒருவர், 1 லட்சம் ரூபாய்க்கும் பொசிஷன் எடுத்து வைத்து, டிரேடில் அதிகப் படியான லாபம் பெற வேண்டும் என்பது அனைவரது இயல்பான குணம் தான்.  நாம் நினைப்பது போல் சந்தை சென்றால் நல்லது தான். ஆனால் அவ்வாறு நடப்பது இல்லையே. நாம் எடுத்து வைத்து இருக்கும் பொசிசனுக்கு எதிர்மறையாக சந்தை செல்லும் போதோ நமக்கு ஒரு விதமான பயம் தொற்றிக் கொள்கிறது. அந்த பயத்தின் காரணமாகத் தான் ஸ்டாப் லாஸ் வைத்து, வைத்து டிரேடு செய்து, டிரேடு செய்து பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறோம். நாம் எங்கெல்லாம், எதனை எல்லாம் அடைய ஆசைப் படுகிறோமோ, அதற்கு எதிர் மறையான சூழ்நிலை நடை பெரும் பொழுது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை அறியாமல் ஒரு விதமான கவலை, பயம் சூழ்ந்து கொள்கிறது.


நாம் குழந்தையாக இருக்கும் போது ஒரு ஐம்பது பைசா  சாக்லேட்டிற்காக அழுதும், அடம் பிடித்தும் அது கிடைக்காத போது கவலை வந்தது. அதே ஐம்பது பைசா சாக்லேட் இன்று நாம் கவலைப்படும் லிஸ்டில் இல்லவே இல்லை.  ஒரு குழந்தை இன்று அதே சாக்லேட்டிற்காக  அடம் பிடிக்கும் போது நமக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது அல்லவா?

 

நான் என்ன சொல்கிறேன் என்றால், பங்கு வணிகத்தில் நாம் நினைப்பது போல் சூழ்நிலைகள் எல்லா நேரமும் கண்டிப்பாக இருக்கப் போவது இல்லை, பெரிய பண முதலைகள் இருக்க விடப் போவதும் இல்லை. நம்மோடு டிரேடு செய்யும் ஒவ்வொரு வணிக முதலைகளும் நம்மை நசுக்கி, ஒவ்வொரு நாளும் மென்று முழுங்கி ஏப்பம் விடத் தூண்டில் போட்டுக் கொண்டே இருகிறார்கள் என்பது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை.  உண்மை தெரியாத சிறிய முதலீட்டாளர் , பாவம் புண்ணியம் எல்லாம் இங்கு எடுபடாது.
பங்கு வணிகம் என்பதும் ஒரு ( பொருளாதார ) யுத்தம் தான்.  நீங்கள் வெற்றிபெற யுத்தம் செய்து தான் ஆக வேண்டும். ஒன்று மறைமுக யுத்தம்மற்றொன்று நேரடி யுத்தம். பேராசை பிடித்த வெறியர்களும், பயப்படுகிற சாமான்னியர்களும் யுத்தத்தில் தோற்பது உறுதி. இந்த யுத்தத்தில் சிலர் ரதங்களோடும், பலர் குதிரைகளோடும், யானைப் படைகளோடும் வருவார்கள்.


அதாவது பெரிய பெரிய கார்பரேட், வங்கிகள், மீச்வல்பண்டு நிறுவனங்கள், அந்நியப் பண முதலைகள், பெருச்சாலிகள், நரிகள், நண்டு, சிண்டு அனைவரோடும் நீங்கள் யுத்தம் செய்து தான் ஆக வேண்டும். சூழ்நிலைகள், இண்டிகேட்டர், ரோபோட், டெக்னிகல்அனலிசிஸ், ப்ரோக்கர்கள் எல்லாம்…. எல்லாம் நமக்கு எதிராகவே இருப்பது போல் தோன்றும்.

 

மறைமுக யுத்தம் என்பது பண முதலைகளிடம் இருந்து உங்கள் பணத்தைக் காத்து லாபம் பெறுவதும், நேரடி யுத்தம் என்பது உங்கள் மனதினைப் பயம் மற்றும் பேராசைக்கு இடம் கொடாமல் சம நிலையில் வைத்துப் போட்ட முதல் தொகையினக்  காப்பாற்றி  லாபம் எடுத்தல் ஆகும்.

நாம் எப்படிப் பேராசை இல்லாமலும், பயம் இல்லாமலும் வணிகம் செய்து, பண முதலைகளிடமும் வெற்றி பெற்று பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கே இந்தப் பதிவு.

எது பேராசை?

ஆசையே துன்பத்திற்குக் காரணம், அத்தனைக்கும் ஆசைப் படு என்ற இரு கொள்கைகளுக்கு நடுவில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.  பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடு காட்டிற்குச் செல்லும் போது, என்னடா வாழ்க்கை நேத்து இருந்தவனை இன்று காணோம், என்று கூறிக் கொண்டே செல்கிறோம், ஆனால் அடக்கம் பண்ணிவிட்டு திரும்பி வரும் வழியில் ஒரு காலி இடம் இருந்தால், இன்று வாங்கிப் போட்டால் பின்னாடி நல்ல காசு பாக்கலாமே என்று மனது நம்மை அறியாமல் அந்தக் காலி மனைக்குள் புகுந்து விடுகிறது.

மருத்துவ மனையில் குழந்தை பெரும் போது மரண வலியை அனுபவிக்கும் அணைத்துத் தாய்மார்களும், அந்த வலி நேரத்தில் என்ன கொடுமையான வலி, இனிமேல் என் புருஷனை பக்கத்துலயே வர விடக் கூடாது என்று தான் கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களும் நினைப்பதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு.
நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒருவருக்கு அத்தியாவசியமானத் தோன்றும்  ஒரு ஆசை, மற்ற ஒருவருக்கு பேராசையாகத் தோன்றுகிறது. KFC சென்று நான்கு நபர்கள் ஒரு வேலை வயிறார  உண்ணலாம் என்பது பேராசை அல்ல. நான்கு பேர் ஒரே ஒரு வேலை சாப்பிட குறைந்தபட்சம் 2000 ரூபாய் ஆகிறது. ஆனால் இதே தமிழ்நாட்டில் பல குடும்பங்கள்  ஒரு மாதம் முழுவதும் சாப்பிடும் தொகை  2000 ரூபாய்கும் குறைவு தான். எனவே பேராசை என்பதற்கு ஒரு தனிப்பட்ட வரையறை இல்லை. அதனை உருவாக்கவும் முடியாது.

என்னைப் பொறுத்த வரை உங்களுக்குப் பங்குச் சந்தையில்  லாபமானாலும் நஷ்டமானாலும்  பரவா இல்லை என்று, ஒரு  தொகை இருக்கும் அல்லவா? அதனை மீறி நீங்கள் வணிகம் செய்தால் நீங்களும் பேராசையான முதலீட்டாளர் தான். சிலருக்கு 1000 ரூபாய் லாஸ் ஆனாலும் பெரிய லாஸ், சிலருக்கு 1 கோடி கூட சமாளிக்கும் தொகை தான்.
என்னால் 5000  ரூபாய் தான் ரிஸ்க் எடுக்க முடியும், அதனைக் கொண்டு 5000 கோடி வைத்து டிரேடு செய்யும் டிரேடரோடு, நான் டிரேடு செய்து லாபம் பார்க்க முடியுமா? என்ற சந்தேகம் வருகிறதா? நிச்சயம் உங்களால் லாபம் பார்க்க முடியும்.  உங்களால் பேராசை இன்றி, பயமின்றி டிரேடு செய்ய முடிந்தால்.

எது பயம்?

நீங்கள் நன்றாக நிற்க உங்களுக்கு எத்தனை அடி இடம் தேவை? ஒரு ஐந்து அடி நிலம் என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் மேலும் கீழும் குதிக்க ஒரு பத்து அடி நிலம் தேவையாக இருக்கலாம். நீங்கள் உங்களை மறந்து நடனம் ஆட ஒரு நூறு அடி போதுமா? நிச்சயமாக நூறு அடி போதுமா?

உங்களுக்கு நூறு அடி இடம் கொடுத்தால், கண்ணை மூடிக் கொண்டு, உங்களை மறந்து டான்ஸ் ஆட முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறீர்கள் பலர். நீங்கள் கேட்ட அதே நூறு அடிதான் , ஆனால் பத்தாயிரம் அடி உயரம் உள்ள ஒரு பெரிய……… கட்டத்தின் மொட்டை மாடியில் தந்தால் உங்களால் கண்ணை மூடி, தன்னை மறந்து டான்ஸ் ஆட முடியுமா.?  வயிற்றைக் கறைக்கிறதா ? அதே நூறு அடி நிலம் தரைப் பகுதி என்றால் நம் மனதிற்கு ஓகே,  உயரம் என்றதும் நாம் கேட்ட அதே நூறடி நமக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது பார்த்தீர்களா? பேராசை என்பதும், பயம் என்பதும் மனம் சார்ந்த விஷயம் தான் என்பதை உங்களால் ஓரளவு ஊகிக்க முடிகிறதா. உங்கள் மனதினை உங்களை விட நன்கு அறிந்தவர் இந்த உலகில் உண்டா?

என்னைப் பொறுத்த வரை நீங்கள் ஒரு டிரேடில் ஒரு பொசிஷன் எடுத்து இருந்தும், உங்களால் அந்தப் பொசிசனைப் பற்றிக் கவலைப் படாமல் ஒரு இரவு நிம்மதியாகத் தூங்க முடியுமா? ஒரு இரவு வேண்டாம், பொசிஷன் எடுத்த பிறகு என்ன நடந்தாலும் பரவா இல்லை என்று ஒரு படம் ரசித்துப் பார்க்க முடியுமா? அது கூட மூன்று மணி நேரம் ஆகும், பொசிஷன் எடுத்த பிறகு ஒரு டீயையாவது  ரசித்து, ருசித்துக் குடிக்க முடியுமா?

பாதி உண்மை, பாதிப் பொய் எல்லாம் இல்லை, உங்கள் மனசாட்சியிடம் கண்ணை மூடிக் கேளுங்கள் . பொசிஷன் எடுத்த பிறகு உங்களால் ஒரு டீ கூட உங்க மனசுக்கு ரெம்ப ரெம்ப பிடிச்சவங்க கூடச் சேர்ந்து  ரசித்து ருசித்துக் குடிப்பது போல ஜாலியாகப், பயமின்றிக் குடிக்க முடியவில்லை  என்றால், நீங்கள் பயத்தின் கோரப் பிடியிலும், உங்களால் ஏற்க இயலாத ஒரு தொகையினை முதலாகக் கொண்டோ, பல மாதங்கள் ஆகியும் லாபம் வராமலும், இந்த டிரேடில் வந்து விடும், அடுத்த டிரேடில் வந்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் டிரேடு செய்பவர்கள் எனில் நீங்கள் பேராசையின் பிடியிலும், மேலே சொன்ன இரண்டும் உங்களுக்குப் பொருந்தும் எனில் நீங்கள் பயம், மற்றும் பேராசையின்  மரணப் பிடியில் சிக்கி உள்ளீர்கள் என்பது பல 1000 சதவீதம்  உண்மை. நீங்கள் யுத்தக் களத்தில் மரிப்பது உறுதி. உங்கள் மனநிலை மாறாதவரை நிச்சயமாக நீங்கள் அதற்குச் சரிப் பட்டு வர மாட்டீர்கள்.

என்ன செய்வது?

அமெரிக்காவில் ஒரு வகையான கரடி இருந்ததாம், அந்தக் கரடி அந்தப் பக்கம் சென்ற ஒருவரைக் கூட உயிரோடு விட்டு வைக்க வில்லையாம், எனவே அரசாங்கம் இது மிகவும் ஆபத்தான பகுதி, ஒருவரும் செல்லக் கூடாது , மீறிச் செல்பவர்களின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்காது என்று ஒரு வாசகம் கொண்ட பலகையினை வைத்தார்களாம்.


ஒருவர் மட்டும் எப்படியாவது அந்தக் கரடிகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தாராம், அரசு எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவர் மீண்டும் அரசிடம் அனுமதி கேட்கவே, ஒரு வழியாக அரசும் அந்தக் காட்டிற்குள் செல்ல அவருக்கு அனுமதி தந்ததாம்.
அவர் காட்டிற்குள் சென்றதும், சற்று நேரத்தில் ஒரு கரடி அவரைக் கண்டு வேகமாக அவரை நோக்கி ஓடி வந்ததாம். அருகில் வர வரக் கரடியின்  உறுமல் சத்தம் அவர் காதைக் கிழிக்கும் அளவு இருந்ததாம். அருகில் வர வர சத்தம் இன்னும் கொடூரமாக இருந்ததாம். அவர் உயிரே போனாலும் நான் பின்வாங்க மாட்டேன் என்று அங்கேயே நின்று கரடியை வேடிக்கை பார்த்தாராம். கரடி கொடூரமாக ஓடி வந்தது, 100 அடி, 50 அடி , 25,15,10,5  அடிகள் வந்து இறுதியாக அவர் மார்பு வரை வந்து விட்டதாம். அவரோ அசைவதாக இல்லை. அவரைச் சுற்றி மறுபடி சத்தம் போட்டதாம், அவரும் அசைவதாக இல்லை. கரடி உடனே கண்டும் காணதது போல் சென்று விட்டதாம்.

இப்பொழுது அரசாங்கம் அந்தக் காட்டுப் பகுதியில் “நீங்கள்  காட்டிற்குள் செல்லலாம், கரடி உங்களைப் பயம் காட்டினால், நீங்கள் அசைவற்றவர்களாய் அப்படியே நின்று விடுங்கள், கரடி ஒன்றும் செய்யாமல் போய் விடும் ” என்ற வாசகம் கொண்ட பலகையினை அங்கு இன்றும் வைத்து உள்ளார்களாம். இது அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம்.


நம்ம விஷயம் :

நீங்கள் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கண்மூடித் தனமாக டிரேடு செய்வதை நீங்கள் இப்பொழுதே நிறுத்த வேண்டும். உங்கள் டிரேடில் உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க இயலும் என்பதை நீங்கள் உறுதியாக இறுதியாக முடிவு செய்ய வேண்டும். என்னால் 5000  முடியும், என்னால்  10000 முடியும், என்னால் 1  லட்சம் , 5  லட்சம்  முடியும் என்கிற காதுல பூ சுத்துற வேளைக்கு இப்பொழுதே முடிவு கட்டுங்கள். மறுபடி மறுபடி கேட்கிறேன்.

உங்களால் நஷ்டம் வந்தாலும் பரவா இல்லை என எவ்வளவு ரூபாய் ரிஸ்க் எடுக்க முடியும்? மறுபடி அதே பதிலைச் சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். எல்லா டிரேடுமா லாஸ் ஆகும் என்ற அசட்டுத் துணிச்சலில் மறுபடி மறுபடி அதே பதிலைச் சொல்லாதீர்கள். இறுதியாகச் சொல்லுங்கள் உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்று?   நிச்சயம் எனில் உங்கள் பதிலை ஒரு பேப்பர் இல் குறித்துக் கொள்ளுங்கள். 5000,10000, 1லட்சம்,5 லட்சம் என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 1000 ரூபாய் கூட இருக்கலாம். உண்மையை எழுதுங்கள்.

ஓகே, உங்களிடம் இறுதியாக சில கேள்விகள். நீங்கள் ரிஸ்க் எடுக்கும் தொகையினைக் கொண்டு ஸ்டாப்லாஸ் இல்லாமால் டிரேடு செய்ய முடியுமா? ஆஆஆஆஆஆஆ….என்னது ஸ்டாப் லாஸ் இல்லாமலா?  நான் தான் ஏற்கனவே சொன்னது தான், உங்களுக்குப் பங்குச் சந்தையில் லாபமானாலும் நஷ்டமானாலும் பரவா இல்லை என்று, ஒரு தொகை இருக்கும் அல்லவா? என்று. இப்பொழுது சொல்லுங்கள் அந்தத் தொகையினை, டிரேடில் ஸ்டாப்லாஸ் வைக்கக் கூடாது.  பாதிப் பேருக்கு பேப்பரில் எழுதின தொகை பாதி ஆகி விட்டதா? ஒரு நிமிடம் கூட உங்களால் ஒரு திடமான மன நிலையில் இருக்க முடிய வில்லை பார்த்தீர்களா?

உண்மையாக நாம் டிரேடில் (லாபம் வர வேண்டும் எனில்) ஸ்டாப் லாஸ் வைக்கப் போவது  இல்லை. ஏன் வைக்கக் கூடாது என்ற ரகசியம் தான் 99.99% டிரேடர்களுக்குத் தெரிவது இல்லை. எல்லாப் பண முதலைகளும் உங்களைப் போன்ற அப்பாவி, பேராசை கொண்ட டிரேடர்களை விழுங்கி ஏப்பம் விட விரிக்கும் வலை தான் ஸ்டாப் லாஸ். ஸ்டாப்லாஸ் இல்லாமல் டிரேடா? அதிர்ச்சியாக உள்ளதா? உங்களால் ஸ்டாப்லாஸ் இல்லமால் டிரேடு செய்ய முடியாது என்றால் நீங்கள் தாரளமாக உங்கள் வழியில் செல்லலாம்.நான் சொல்வதை நம்பி ஒரிஜினல் அக்கௌன்ட் வேண்டாம். டெமோவில் டிரேடு செய்து பாருங்கள். இல்லை எனது கிளைன்ட்களின் அக்கௌன்ட் பார்க்கலாம். நீங்கள் டிரேடு செய்து நம்புங்கள், என்னைப் பொறுத்த வரை, அது தான் ஆரோக்யமான விஷயம். ஸ்டாப்லாஸில் உள்ள அதிர்ச்சி உங்களை தலை சுத்த வைக்கும். நமது அடுத்த பதிவே அழகாய்க் கொள்ளும் அரக்கன் – ஸ்டாப் லாஸ். இது தான் பதிவின் தலைப்பு.

அடுத்த கேள்வி, உங்களால் நாம் எடுக்க நினைக்கும் லாபம் வரும் வரையில் அந்தப் பொசிசனை அவசரம் இல்லாமல் சொற்ப லாபத்தில் கட் பண்ணாமல், நமது இலக்கு வரும் வரை உறுதியாகக் காத்து இருக்க முடியுமா? சில நேரம் லாபம் வந்து நஷ்டம் வந்தால் என்ன செய்வது? உங்கள் கேள்வி நியமானது தான், ஆனால் நடைமுறை அப்படி இருக்காதே.

நீங்கள் ஒரு கடை வைத்து இருக்கிறீர்கள்,  100 வடை செய்ய 200  ரூபாய் செலவு என்று வைத்துக் கொண்டால், ஒரு வடையினை 2 ரூபாய்க்கு விற்றால் தான் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை ( break even )  என்று சொல்வார்கள்.  ஆனால் இந்த முறையில் 80  வடைகள் மட்டும் விற்று  20 வடைகள் விற்காமல் போனாலும் 40  ரூபாய் நஷ்டம் தான். எனவே தான் எல்லாத் தொழிலிலும் 35% – 40 % பொருள் விற்கும் போதே போட்ட முதலை எடுக்க வேண்டும் என்று ஒரு நியதி உள்ளது.  40  வது  வடை விற்கும் போதே  போட்ட முதல்  200   ரூபாய் வந்து விட வேண்டும் எனில் ஒரு வடை  5  ரூபாய்க்குக் கண்டிப்பாக விற்க வேண்டும். வேறு வழியே இல்லை முதல்  40  வடைகளை நீங்கள்  5 ரூபாய்க்கு விற்று தான் ஆக வேண்டும்.   மீதம் உள்ள 60  வடைகளை  5  ரூபாய்க்கு விற்று விட்டால்  300  ரூபாய் சுளையாக லாபம்.  இது எல்லாம் நேரம் ஆக ஆகக் குறைத்துக் கூட  விற்கலாம், தவறு இல்லை. இது போல் தான் பங்கு வணிகத்திலும் நாம் போட்ட முதல் தொகையினை எடுக்க சில விலை நிலைகள் வரும் வரை கட்டாயம் அந்தப் பொசிஷனை வைத்து இருக்க வேண்டும். இல்லை எனில் நஷ்டம் தவிர்க்க இயலாது. ஓ…..தாரளமாக இருக்கலாமே என்கிறீர்களா?

எவ்வளவு நாட்கள் ஆனாலும், மாதமானாலும், ஏன் வருடமானாலும் இருப்பீர்களா?  காலையில் வடை போட்டால் மாலை வரை  கூட வைத்து விற்க வேண்டும், ஆள் வரவில்லை என்று கீழே கொட்டி விட முடியுமா? இல்லை நஷ்டத்திற்கு விற்க முடியுமா? ஒரு நாள் விற்கலாம், எல்லா நாளும் இயலுமா?  அரிசி விற்க பல நாட்கள் ஆகலாம், கார் விற்க பல மாதங்கள் ஆகலாம், காத்து இருபதற்குத் தகுந்தார் போல் லாபம். நீங்கள் ஒன்ன்றும் சும்மா காத்துக் கொண்டு இருப்பதில்லை. நாம் தான் இன்ட்ட்ரா டே தாண்டி யோசிப்பதே இல்லையே.

உன் பணம் உன் கையில்

இறுதியாகச் சொல்கிறேன், கண்மூடித்தனமாக ரிஸ்க் எடுபவர்களை பேராசை மற்றும் பயம் ஒரு நாளும் விடாது. உங்களால் மனப்பூர்வமாய் இழக்க முடிந்த அளவு மட்டுமே ரிஸ்க் எடுங்கள், இவ்வாறு செய்வதால் பேராசை இப்பொழுதே உங்களை விட்டு ஓடி விடும்.

நீங்கள் உங்கள் ரிஸ்க்கினை உங்கள் கட்டுக்குள் வைத்து,லாபம் வரும் வரை, சந்தையில்( அமெரிக்கா கரடி போல)  என்ன நடந்தாலும் நீங்கள் அசராமல் இருப்பதால் சந்தை தான் உங்களைப் பார்த்துப் பயப்பட வேண்டுமே ஒலிய, பயம் உங்கள் பக்கத்தில் கூட வராது.  இவ்வாறு செய்தால் …..மட்டுமே

நீங்கள் நிச்சயம் சரிப்பட்டு வருவீர்கள்……

உங்களுக்கு போரெக்ஸ்  வர்த்தகத்தைப் (FOREX TRADING) பற்றி அடிப்படை முதல் கற்றுக் கொள்ள அழைக்கவும்
ஸ்கைப் : Forexgdp
மின்னஞ்சல் : Support@forexgdp.com

 

மேலும் சில இலவச  போரெக்ஸ் அடிப்படை விஷயங்களை கற்று கொள்ள : https://forexgdp.com/forex-trading-in-tamil/

FOREX GDP

Forexgdp.com is providing High Quality Forex signal services exclusively to all type of traders around the world. Forex GDP team worked with major banks, Financial Institutions and various Forex brokers as Forex Dealer, Fund Managers, Trading Platform Administrator, and many other different positions in Forex Trading Companies. Try our Free service now to see the quality trades. Click here to join FREE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't trade all the time, trade forex only at good trade setup. Get best forex signals to your WhatsApp

Join Free Trial
X